ரிஷப: ராசி
ரிஷப: ராசி

இறை அச்சமும், இரக்க குணமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்கிறார். இதனால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். பிள்ளைக்காக ஏங்கியவர்கள் வீட்டில் மழலை ஒலி கேட்கும். தள்ளிப்போய்க்கொண்டிருந்த குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பூசல் தீர்ந்து, பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயார் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறு அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியும் வரலாம். சுப செலவுகளும் ஏற்படும். சிலர், தங்களது வீட்டை விரிவுபடுத்துவார்கள். பலர், வசதியான பெரிய வீட்டுக்கு இடம் பெயர்வார்கள். அரசு ரீதியான தொந்தரவுகள் ஏற்படலாம். ஆகவே, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றிச் செலுத்துங்கள்
08.01.2016 முதல் 10.03.2016 வரை… மனதில் உறுதி பெருகும். பெற்றோர் ஆரோக்கியம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலருக்கு புது வாகன யோகம் உண்டு. அரசு தொடர்பான வேலைகள் விரைந்து முடியும்.
. 11.03.2016 முதல் 15.11.2016 வரை… தோற்றத்தில் பொலிவு கூடும். விலை உயர்ந்த மின்னணு, மற்றும் மின்சார உபகரணங்களை வாங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். சிலருக்கு இரத்த சோகை, சளித் தொந்தரவு ஏற்படக்கூடும். 16.11.2016 முதல் 25.7.2017 உடல் நலம் பாதிக்கும். குறிப்பாக, படபடப்பு, கை, கால் மரத்துப்போவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும்.
வழிபாடு: கேரள மாநிலம் கோழிக்கோடு ஸ்ரீ லோகாம்பிகையை வணங்குங்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்து தொட்டதெல்லாம் துலங்க வைத்த கேது பகவான் இப்போது பத்தாம் வீட்டில் அமர்கிறார். இதனால் பணிச்சுமை கூடும். தாழ்வு மனப்பான்மையால் அவதியுறுவீர்கள். கற்பனையான பயம், மனதில் தோன்றும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் அளிக்காதீர்கள். அதே போல பிறருக்கு ஜாமீன் போட வேண்டாம. புதிதாய் அறிமுகமாகும் நபர்களை நம்பாதீர்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை மனதில் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும்.   மூத்த சகோதரர்களால் அலைச்சல் ஏற்படும். அதே நேரம் அவர்களால் ஆதாயமும் அடைவீர்கள். . 13.07.2016 முதல் 20.03.2017 வரை.. யாரையும் நம்பாதீர்கள். உங்கள் சொந்த முயற்சியில் எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர் தலையிட அனுமதிக்காதீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 21.03.2017 முதல் 25.07.2017 வரை தம்பதிக்குள் அன்பு மேலிடும். எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டாலும், எடுத்த பணியை நிறைவாக செய்து முடிப்பீர்கள்.