ரஜினியின் ஹாலிவுட் படம்!

Must read

rajini

கபாலி படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே, ரீலிஸ் வரையிலான “செய்திகள்” பரவிவிட்டது.  இப்போது ரஜினியின் அதற்கு அடுத்த படமான “எந்திரன் – 2” பற்றி நியூஸ் (?)   வர ஆரம்பித்துவிட்டது.

இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர், ஹாலிவுட் படமாக இதை உருவாக்கப்போகிறாராம். அதாவது ரஜினியும், ஷங்கரும்தான் இங்கத்திய ஆட்கள். மற்றபடி ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லன்., மற்றும் பலரும் ஹாலிவுட்டிலிருந்து வருவார்களாம்.

நடிகர்களுக்கே இப்படி ஐடியா வைத்திருந்தார் என்றால் டெக்னீஷியன்களை மட்டும் மல்லிவுட்டிலிருந்தா கொண்டு வருவார்.. அவர்களும் ஹாலிவுட் தானாம்!

தமிழா இங்கீஸா… இரண்டிலும் வெளியாகுமா, படப்பிடிப்பு அமெரிக்காவிலா என்பது பற்றி எல்லாம் யாராவது “ செய்தி” சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

3 COMMENTS

Latest article