ரஜினிகாந்த்

நடிகர்களுக்கு எச்சரிக்கை: ஓட்டு போட்டதோடு வேட்டும் வைத்தார் ரஜினி!

டிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் சில நிமிடங்களுக்கு முன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி, “நடிகர்கள் எல்லோரும் ஒரே இனம் ஒரே ஜாதி.. சமீபகாலத்தில் இங்கே சில வாக்குவாதங்கள்ந நடந்துகிட்டு இருக்கு. இதை தவிர்க்கணும். அதே நேரம், இதனால நடிகர்களுக்குள்ள ஒற்றுமை இல்லேனு மீடியாக்கள் நினைச்சுடக்கூடாது” என்றார்.

அதோடு, ஏற்கெனவே பாரதிராஜா உட்பட சிலர் கூறியது போல, “தேர்தல் முடிந்து வெற்றி பெறும் அணி, முதல் வேலையாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும்” என்று கூறி தனது தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார்.

இறுதியாக அவர் பேசியதுதான் ஹைலைட்: “ வெற்றி பெற்று வருபவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். உயிரே போனாலும் அவற்றை நிறைவேற்றணும். முடியாவிட்டால் உடனே பதவி விலகுங்கள். அப்போதுதான் நீங்களும் மன நிம்மதியா இருக்க முடியும். நல்ல பெயரையும் கொடுக்கும். பின்னாட்களில் இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்!” என்றார்.

இவ்வாறு, வெற்றி பெறும் அணிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ரஜினி.