vasa
.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று பேசப்பட்ட த.மா.கா. இன்று தவித்துப்போய் நிற்கிறது.
இக் கட்சிக்கு இடம் அளிக்காமல், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. தி.மு.க. கூட்டணயில் காங்கிரஸ் இருப்பதால் அங்கும் செல்ல முடியாத நிலை த.மா.காவுக்கு. இடையில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா கூட்டணி ஏற்படப்போவதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்தி பரவியது.
இந்த நிலையில் மக்கள நலக்கூட்டணியில் த.மா.கா சேரப்போவதாக சிலர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மாலை நான்கு மணிக்கு விஜயகாந்தை அவர் சந்திக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலலுக்கு இன்னும் ஐம்பது நாட்கள் கூட இல்லாத நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது என்று புரியாமல் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.