டில்லி

ன்றைய ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி குறித்து அறிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்

இந்த ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்தியப் பிரதமர்\ மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி,

”அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எரிபொருள் கலப்பு விஷயத்தில் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை ஆகும். உலக அளவில் பெட்டலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு.

உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி இதற்காக அமைக்கப்படும். க் 20 நாடுகள் இந்த முயற்சியில் சேரவேண்டும். தவிர இந்த நாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்:”.

என்று உரையாற்றி உள்ளார்.