பேச்ச சாதுர்யமும், உற்சாக உழைப்பும் கொண்ட மேஷராசி அன்பர்ளே…
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு திடீர் யோகத்தையும், புகழையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு உகந்த இடம் அல்ல. ஆனாலும், உங்கள் யோகாதிபதி சூரியனின் வீட்டில் அமர்வதால் தீய பலன்களைக் குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
எந்த ஒரு விஷயத்திலும் வீண் குழப்பம், தடுமாற்றம் ஏற்பட்டு மறையும். பிள்ளைகள் உங்கள் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவார்கள். விட்டுப்பிடியுங்கள். மகளின் திருமண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. மகனின் உயர்கல்வி, வேலைவாய்பபு தொடர்பான முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய செயல்பாடு மேன்மை அடையும். பலர், வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீரகள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை திருமண காலம். மண வயதில் இருப்போருக்கு நல்ல செய்தி வந்து சேரும். .
16.11.2016 முதல் 25.7.2017 வரை கவலைகள் மனதை வாட்டும். வீண் பண விரயம், திருட்டு, பணப் பற்றாக்குறை, சிறுசிறு விபத்துகள் என பலவித இடையூறுகள் ஏற்படும். உணவில் கவனம் தேவை. ஒரு. சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கு். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும்.
வழிபாடு: யோக நரசிம்மரை அனுதினமும் துதியுங்கள். பிரச்சினைகள் குறையும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்துகொண்டு அலைச்சலையும் வீண் செலவுகளையும் அளித்த கேதுபகவான் இப்போது 11-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்கள் செல்வாக்கு அதிரிக்கும். பாதியில் நின்ற பணிகள் எல்லாம் முழுமையாக நிறைவடையும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிகவாதிகள் தொடர்பால் மனம் தெளிவடையும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்பு பெருகும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை நினைத்ததெல்லாம் நிறைவேறும். வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு நல்ல செய்தி வந்து சேரும். தந்தையின் உடல் நலம் சீராகும். புதிய வேலை தேடி வந்தோருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். .
13.07.2016 முதல் 20.03.2017 வரை மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றி அலைக்கழிக்கும். வீண் பகை, நரம்பு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். எதிரிகளால் அவமானகரமான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை உயர் அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.