மேகதாது அணை விவகாரம்: கர்நாடக முதல்வருடன் நிதின் கட்கரி ஆலோசனை

டில்லி:
காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கி உள்ள விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்சி ஆலோசனை நடத்தினார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களிடையே சமரசம்  ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது.

இதன் முதல்கட்டகமாக கர்நாடக முதல்வருடன் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி,  மேகதாது அணையால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக் கொண்டார். மேலும், இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் கட்கரி உறுதியளித்தார்” என தெரிவித்துள் ளார்.

பாஜக அரசின் கடைசி பாராளுமன்ற  கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை மேகதாது அணை மற்றும் ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் நோக்கில், மேகதாது அணை விவகாரத்தில் சமரசம் செய்ய மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CM Kumarasamy, karnataka, Kumarasamy, Mekedatu Dam issue, tamilnadu, Union Minister Nitin Gadkari, கர்நாடகா, குமாரசாமி, சமரசம், தமிழ்நாடு, பாராளுமன்றம் முடக்கம், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மேகதாது அணை:
-=-