மெரினாவில் போராட்டமா?: காவல்துறை எச்சரிக்கை

Must read

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முனைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

நீட் தேர்வு குழப்படிகளால் விரக்தி அடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாநிலம் முழுதும் பரவலாக பல இடங்களில் போராட்டம் நடந்தவருகிறது.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாளை இரவு 12 மணிக்கு கூடி போராட்டத்தில் இறங்கப்போவதாக சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளஅளது. அதில், “சென்னை மெரினா கடற்கரையில் கூடுவது சட்டப்படி குற்றம். அப்படி இங்கு கூடி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்பபட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது

More articles

Latest article