மூன்று லட்சமாகும் ஐ ஐ டி கல்விக் கட்டணம் :ஏழைக்கு எட்டாக்கனியாகும் கல்வி !!

Must read

IIT
இந்தியத் தொழிற்னுட்பக் கழக கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தவும், புதிய நுழைவுத்தேர்வு முறையை 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தவும் கோரும் திட்டவரைவினை ஐ ஐ டி கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இசைவிற்குப் பிறகு அமல்படுத்தப் படுமெனத் தெரிகின்றது.
வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் விதமாக 8 வெளி நாடுகளில் ஐ ஐ டி நுழைவுத்தேர்வு நடத்தப் படவெண்டும் என்றும் திட்டவரைவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அசோக்மிஷ்ரா தலைமையிலான கமிட்டி தனியார் நுழைவுத்தெர்வு பயிற்சி மையங்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த பல சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக
மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு சிறப்பான நுழைவுத்தேர்வு பயிற்சியினை இணையதளங்கள் வாயிலாக நடத்தி, மாணவர்கள் தனியார் பயிற்சிமையங்களை நாடுவதை குறைக்க வழிகாண வேண்டுமெனவும் வழிமொழிந்துள்ளது என ஐ ஐ டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், எல்லா மாணவர்களுக்கும் வட்டி இல்லா கடன் வழங்கப் படவேண்டும் எனவும் அழுத்தமான வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது. இதனையும் ஐ ஐ டி கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது
ஐ ஐ டி இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி ,அதன் உபக்கமிட்டித் தலைவர் தேவாங் காகர் தலைமையில் அளித்த “ கல்விகட்டணத்தை மூன்று இலட்சமாக உயர்த்துவது, ஐ ஐ டிக்கு நிதிவருவாயைப் பெருக்குவது குறித்தும் வழங்கிய சிபாரிசை கலந்தாலோசித்து இந்த முடிவினை எடுத்துள்ளது. அரசின் உதவித்தொகையில் முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்துவதில் உள்ள சிக்கல்கல் குறித்து மீண்டும் பரிசீலித்து மீண்டும் அறிக்கை தாக்கல் செய்து தருமாறு உபக்கமிட்டிக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
இந்தக் கமிட்டியின் வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் வெளிநாட்டு மாணவர்களின் கட்டணமும் 4000 டாலரில் இருந்து 10000 டாலராக உயர்த்தப் படும்.
உயர்கல்வி தனியார்மயமாவதை தடுக்கும் பொருட்டு ஐ ஐ டி மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டால், மத்திய வருவாய்ப் பிரிவினருக்கும், ஏழைகளுக்கும் ஐ ஐ டி கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும் என்பது நிதர்சனம்.
 

More articles

Latest article