சுசிலா கார்க்கியை nepal chief justice
சுசிலா கார்க்கியை

 

நேபாளம் தன்னை 2015ம் ஆண்டு கூட்டாச்சி  குடியுரசாக பிரகனப்படுத்திக் கொண்டு  புதிய அரசியல் சாசனத்தைப்  பின்பற்றத்  துவங்கியதிலிருந்தே  பல முற்போக்கான  மாறுதல்களைச் சந்தித்து வருகின்றது .
குறிப்பாக அந்நாடு முதல் பெண் ஜனாதிபதி மற்றும் முதல் பெண் சபாநாயகரை தேர்வு செய்தது. தற்பொழுது 2016 ஆண்டில் அந்நாடு முதல் பெண் தலைமை நீதிபதியை  தேர்வு  செய்யவுள்ளது.
நேபாளத்தின் அடுத்த தலைமை நீதிபதியை   தேர்வு செய்யும் அதிகாரம் கொண்ட   பிரதமர் தலைமையிலான  நீதித்துறை அமர்வு  தங்களுடைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், மூத்த பெண் நீதிபதியான சுசிலா கார்க்கியை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க  ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளது.
நேபாள  ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரியின் ஒப்புதலுக்கு பின் அவர் பதவி ஏற்பார் . வருகின்ற ஏப்ரல் 13ம்  தேதி தற்பொழுதைய தலைமை நீதிபதி கல்யான் ஸ்ரேஷ்தா ஓய்வு பெற்றபின்  சுசிலா கார்க்கி பதவிஏற்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .
 லஞ்சத்தை கடுகளவும் சகித்துக் கொள்ளாதவர் இந்த  சுசிலா கார்க்கி  என்பது குறிப்பிடத்  தக்கது.