po new

சென்னை:

ஒருலட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு தொழில் முதலீடு திரட்டுவதற்கான முயற்சியாக, தமிழக அரசு இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் பல இடங்களில், “நிலத்தடி நீரை லிட்டர் 40 பைசாவுக்கு முதலீட்டாளர்களுக்கு விற்று அதை மீண்டும் 20 ரூபாய்க்கு வாங்கும் முட்டாள்தன நாடாக தமிழ்நாடு விளங்குகிறது. அதனால்தான் முதலீட்டிற்கு சிறந்த இடமாக இந்தியாவில் தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான அடிப்படை” என்ற வாசகத்துடன் “தமிழக மக்கள் முன்னணி” என்ற பெயருடன் சென்னையின் சில பகுதிகளில்., குறிப்பாக மாநாடு நடக்கும் வர்த்தக மையம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ காவல் துறை தீவிர விசாரணையில் இறங்கி, இந்த போஸ்டர்களை ஒ!ட்டியவர் பொழிலன் என்பவர்தான் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தது.

newnew

காவல்துறை தரப்பில், “மறைந்த தமிழ்தேசியவாதியும் கவிஞருமான பெருஞ்சித்தரனார் என்பவரின் மகனான பொழிலன், 1987ம் ஆண்டு கொடைக்கானலில் டி.வி. கோபுரத்துக்கு குண்டு வைத்த வழக்கில் கைது செய்ப்பட்டு, பிறகு விடுதலை ஆனவர்” என்று கூறப்படுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும், பொழிலன் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.