மீன ராசி
மீன ராசி

அமைதியை விரும்பும் மீன ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களுடைய திறமையை முடக்கிய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்கிறார். ஆகவே இனி நல்லகாலம்தான். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நடந்தேறும். சமுதாயத்தில் அந்தஸ்து பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்ற வீட்டை கட்டி முடித்து குடிபுகுவீர்கள். . சச்சரவுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவார்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணைக்கு இருந்துவந்த நோய் குணமடையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்கு வர்த்தகம் மூலமாக லாபம் கிடைக்கும். சென்றவிடமெல்லாம் சிறப்புதான். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து சமுதாயப்பணிகளை செய்வீர்கள். ரத்தினங்கள், ஆபரண சேர்க்கை உண்டு. . பிள்ளைகள் விரும்புவதை வாங்கித்தருவீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டு. ஆனால் அவர்களை திறம்பட சமாளிப்பீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை மாற்று மொழிக்காரர்களால் உதவிகள் பெறுவீர்கள். . அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு அரசாங்க பதவி சிலருக்குத் தேடி வரும். ஆனால் உடல் நலம் பாதிக்கக்கூடும். கவனம் தேவை.
11.03.2016 முதல் 15.11.2016 வரை வேலைச்சுமையால் பதட்டமான மனநிலை ஏற்படும். காரியத் தடங்கல் வீண் செலவுகள் ஏற்படும். . தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். ஆனால் பணவரவு சரளமாக இருக்கும்.
வழிபாடு: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் நீலகண்டேசுவரரை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பலவித தொல்லைகளை கொடுத்து வந்த கேது இப்போது 12-ம் வீட்டில் சென்று மறைகிறார். ஆகவே இனி நல்லகாலம்தான். உடல்நலம் பெறும். மனம் அமைதியுறும். சிந்தித்து செயல்பட்டு பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொலிவு கூடும். பேச்சில் முதிர்ச்சி தென்படும்.
ஆனால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வேலை கிடைக்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் மனதினில் தோன்றி மறையும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் அளிப்பீர்கள். பலர்,   தங்களது பழைய மனையை விற்று புதிய மனை அல்லது வீடு வாங்குவார்கள்.
பொதுவில்,இந்த ராகு கேது மாற்றம் எல்லா வளங்களையும் தருவதுடன், எதையும் சாதிக்கும் துணிவையும் கொடுக்கும்.