கீதா லட்சுமி.. முதல்வர் ஜெயலலிதாவுடன்
கீதா லட்சுமி.. முதல்வர் ஜெயலலிதாவுடன்

 
ள்ளக்குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததோடு, அதீத கட்டணமும் வசூலித்து மாணவர்களை பல வருடங்களாக ஏமாற்றியிருக்கிறது எஸ்.வி.எஸ். கல்லூரி” என்று புகார் கிளம்பியிருக்கிறது.
அதோடு, “இப்படி அடிப்படை வசதிகளே இல்லா கல்லூரிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது” என்று எம்.ஜி.ஆர். பல்கலை நோக்கியும் குற்றச்சாட்டு திரும்பியது.
உடனே, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி, “கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் யோகா கல்லூரிக்கான அங்கீகாரம் கடந்த 2008ம் ஆண்டே ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.
ஆனால் அவர் சொன்னது பச்சைப்பொய் என்பது தெரியவந்திருக்கிறது.   கடந்த 2014-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலை வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலில், இந்த எஸ்விஎஸ் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது. அதோடு,  பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலிலும்  அந்த எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரி இடம்பெற்றுள்ளது.
 
2014லிலும் எஸ்.வி.எஸ். பெயர்
2014லிலும் எஸ்.வி.எஸ். பெயர்

“ஆகவே தகுதியில்லாத கல்லூரிக்கு அனுமதி அளித்து மாணவர்கள் மரணத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது எம்.ஜி.ஆர். பல்கலை” என்று குற்றம் சாட்டுகிறார்கள் பெற்றோர்கள்.
தகுதியில்லாத எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி உட்பட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

  • மகிழன்