மனித சிறுநீரில் இருந்து செங்கல் தயாரிக்கலாம்!

கேப் டவுன்:

னித சிறுநீரைக் கொண்டு செங்கற்கள் தயாரிக்கும் முறையை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக பல்கலைக்கழகத்தின் கழிவறையில் சிறுநீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து அதனோடு மணல் மற்றும் ‘யூரீஸ்’ என்ற ஒரு பாக்டீரியாவைச் சேர்த்து செங்கற்கள் உருவாக்கி தங்களது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இந்த செங்கற்கள் தயாராக ஒரு வார காலம் தேவைப்படும் என்றும் இந்த கற்களை பயன்படுத்துவதால் மக்களின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் இந்த செங்கற்களை பெரிய அளவில் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை. சிறுநீர் மூலம் ஒரு செங்கல் தயாரிக்க சுமார் 20 லிட்டர் சிறுநீர் தேவைப்படும். எனவே, வணிக ரீதியாக இதை செயல்படுத்த சிறுநீர் சேகரிப்பு தான் பெரிய சாவாலாக இருக்கலாம் என்று இப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: South African university researchers have created bricks using human urine, மனித சிறுநீரில் இருந்து செங்கல் தயாரிக்கலாம்!
-=-