மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- விரைவில் அறிவிக்கப்படும்

Must read

டெல்லி

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல்  முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தமாத இறுதியில் வெளியாகும் நம்ப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

எனினும் இதுகுறித்து ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தற்போதைய விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு இல்லை என்றும் இது மிகவும் குறைவானது என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் தேதியிலிருந்து மத்திய அரசு  ஊழியர்களுக்கு 2 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதையும் சேர்த்தால் சராசரியாக அகவிலைப்படி 4. 95 சதவிதம் உ.யர்த்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article