மது அரக்கனை எதிர்ப்போம்..

Must read

 

arakkan

குடி…குடியைக் கெடுக்கும்…!
குடி…வீட்டிற்கும் …நாட்டிற்கும் கேடு…!!
பெயறரளவில்….
விளம்பரம் மட்டும் போதுமா.?
உண்மையான அக்கரை…
அரசுக்கு இருக்கிறதா.?
குடித்துவிட்டு வாகனம்
ஓட்டும் ஒருவர்…
மனித வெடிகுண்டுக்கு சமமானவர்…
என்று நீதி மன்றமே..எச்சரிக்கிறது…!!
குடும்ப உறவுகள்
சீர்குலைக்கும் மது…!
குற்றங்கள் பெருக…
காரணமான மது…!
சோம்பேறி சமூகத்தை
உருவாக்கும் மது..!
குடிகார கணவனின்
கொடுமை தாங்காமல்..
தன்னை உயிருடன்
கொழுத்திக் கொண்ட
பெண்கள் ஏராளம்…!!
தாலிகளை இழந்து
பரிதவிக்கும்
தாய்மார்கள் மனதில்
எரிகிறது நெருப்பு…!!
தீமையின்…
உச்சகட்டமாக…..
பிஞ்சு குழந்தைக்கு…நஞ்சை அளிக்கும் இரக்கமற்ற
புத்தியை…..கொண்ட
குடிகார சமூகம்….
உருவாக …..
அரசாங்கமே…
காரணமாகிவிட்டது….!!
“நோயாளி” இளைய சமுதாயத்தை உருவாக்க…
வேண்டாம்…!!
ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும்
திறனை…இழந்த
இளைய தலைமுறையை
காப்பாற்ற….
வேண்டாம் மது …!!
வேண்டாம் மது…!!

-‘அ.முத்துக்குமார்

More articles

Latest article