மணிப்பூர்: நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

கனமழையால் மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் இறந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

landslide

இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் “ மேற்கு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து சரியாக 96 மைல் தொலைவில் அமைந்துள்ள டெமென்ங்லாக்கில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 7பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பலர் இடிபாடிகளில் சிக்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களை மீட்க மீபுப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியதாக மணிப்பூர் முதலமைச்சர் பிரன்சிங் கூறியுள்ளார். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.