வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்றபடி பாகிஸ்தான் உரி தாக்குதல் மூலம் விதைத்த வினையை பங்குச் சந்தையில் அறுத்திருக்கிறது.
karachi-stock-exchange
காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அதிகாலை, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஆற்றிய கடுமையான எதிர்வினைகளால் எல்லைப் பகுதியில் போர்மேகம் மூண்டது. எந்த நேரமும் போரை எதிர்பார்த்து பாகிஸ்தான் விமானப்படை உஷார் படுத்தப்பட்டது.
இந்த போர் பீதியினால் கராச்சியின் பங்கு சந்தை 569 புள்ளிகளில் இருந்து 39,771 புள்ளிகள் என்ற அளவுக்கு மிக மோசமான சரிவை சந்தித்ததாக தெரியவருகிறது. இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற வதந்திதான் பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்று கராச்சி ஸ்டாக் எக்ஸேஞ்ச் தலைவர் ஆரிஃப் ஹபீப் தெரிவித்தார்.