இளையராஜா

 

சைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமான தாரைதப்பட்டையை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று இசை வெளியானது.. வழக்கம் போலவே ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் ராஜா.

அதுவும் பிரசன்னா, மானசி பாடிய, “ஆட்டக்காரி மாமன் பொண்ணு .. “ பாடல், ரசிகர்களை ரொம்பவே தூள்ளவைத்திருக்கிறது.

இந்த பாடலை இசைஞானி இளையராஜாவே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடல் வரிகள் வருமாறு…

பெண் :

ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி தின்னு
கூட்டு சேர்ந்து போட்டு தாக்கவா
கிட்ட வா கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா

ஆண் :

கேட்டு கேட்டு புளிச்சு போச்சு டி
ஒத்து டி வெட்டி வேலையை விட்டுடு டி

நீ சிரிக்கும் சிரிப்பு
விரிக்கும் புகையிலை
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும்
திருநாள் ஆட்டத்துல

இந்த பாடல் ரசிகர்களை துள்ள வைக்கிறது என்றால், திருவாசகபாடலான, “பாருருவாய பிறப்பற வேண்டும்” அனைவரையும் உருகவைக்கிறது. இந்த பாடலைக் கேட்பது பக்தி பரவசம் என்பதையும் தாண்டி ஏகாந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருபக்கம் துள்ளல் பாடல், இன்னொரு பக்கம் பரவச பாடல் என்று இருவித பாடல்களிலும் ஜொலிக்கிறார் ராஜா!