சமூக அவலங்களை தனக்கே உரிய பாணியில் கலைநயத்துடன் அளிப்பவர் இயக்குர் ராம். ஆகவே அவரது “தரமணி” படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“தரமணி”யும் நமது கதைதான். அதாவது நம்மைச் சுற்றி நடக்கும் கதை.
ஆனால் சென்சார் போர்டு உறுப்பினர்கள், இந்த படத்துக்கு ஏ சான்றிதழ்தான் கொடுக்க முடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.
காரணம், படத்தில் பெண் மது அருந்துவதாக ஒரு காட்சி வருகிறதாம்.
இயக்குநர் ராம், “ஹீரோக்கள் ராவாக மது குடித்தால் ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் தரப்படுகிறது. பெண் மது அருந்தினால் மட்டும் ‘ஏ’ சான்றிதழா?” என்று பொங்கிவிட்டார்.
ஆனாலும் ஏ சான்றிதழ்தான் கிடைத்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாம்