புதிய தலைவரை நியமிக்கும் வரை  மவுன விரதம்:  இளங்கோவன் தகவல்

Must read

கரூர்:  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்.
evks-elagovan
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டெல்லி காங்கிரஸ் தலைமையிடத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அதை  நிராகரித்து விட்டதாக தெரிகிறது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  கருர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் வீட்டில் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத  ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன்,  தமிழக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படும் வரை நான் மவுன விரதத்தை கடைபிடிக்க போகிறேன்  என்று கூறி விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

More articles

Latest article