பி.எஸ்.எல்.வி. சி 32
பி.எஸ்.எல்.வி. சி 32

இஸ்ரோ தனது  6 ஆவது வழிகாட்டி செயற்கைக் கோளை வெற்றிகரமாக இன்று மாலை 4.01 மணி அளவில் விண்ணில் செலுத்தியது.
பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். எஃப்  1 என்ற வழிகாட்டி செயற்கைக் கோள்  விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் செலுத்துவதற்கான  52 மணி நேர கவுண்ட் டவுன் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. முதலில் மாலை 4 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் 1 நிமிடம் தாமதமாக 4.01 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது
.ராக்கெட் செல்லும் பாதையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோன்ற ராக்கெட் இந்த ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்வள ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டது. அதன்படி இன்றுடன் சேர்த்து 6 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் 7 ஆவது மற்றும் இறுதி செயற்கைக் கோளான  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஜி ‍1 நடப்பு மார்ச் மாதத்தின் இறுதியில் விண்வெளிக்கு செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.