பிரான்ஸ்: காளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் பலி

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் ஒருவர் காளை முட்டி இறந்தார்.

மேற்கு பிரான்ஸில் உள்ள எய்ர் சுர் அடவர் என்ற இடத்தில் இரு தினங்களுக்கு காளை அடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். காளையை அடக்க ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல வீரரான இவன் பெட்டினோ (வயது 36) களத்தில் இறங்கினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பல விருதுகளையும் பெற்று பிரபலமானவர். நிகழ்ச்சி துவங்கியதும் காளையிடம் சண்டையிட அவர் தயாரானார் அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த உடை அவரது கால்களை சுற்றியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவரை காளை தனது கூர்மையான கொம்புகளால் குத்தியது.

பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிதாபமாக அவர் இறந்துவிட்டார். காளையின் கொம்பு அவரது நுரையீரலை சேதப்படுத்தியதால் ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது அவருக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


English Summary
france famous bull fighter killed in a show