பிரபாஸ் – காஜல் நடிக்கும் "பிரபாஸ் பாகுபலி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.."

Must read

பிரபாஸ் – பிரபு – காஜல் அகர்வால் நடிக்கும் “ பிரபாஸ் பாகுபலி “

ஒரு தென்னிந்திய படம் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்திய படம் “ பாகுபலி “ அந்த படத்தின் நாயகன் பிரபாஸ் உலகளவில் பிரபலமானார். பிரபாஸ் தெலுங்கில் நடித்து மெகா ஹிட் ஆனா “ டார்லிங் “ என்ற படம் தமிழில் “ பிரபாஸ் பாகுபலி “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
செல்வந்தன், இது தாண்டா போலீஸ், புருஸ்லீ, மகதீரா, எவன்டா போன்ற மொழிமாற்று படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். இதே நிறுவனம் கபர்சிங் படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்துடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் “ கரைனோடு “ என்ற படத்தையும் வெளியிட உள்ளனர்.  பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யாசீத்தாலா, வெங்கட்ராவ் ஆகியோர் தயாரிக்கும் “ பிரபாஸ் பாகுபலி “ படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் முகேஷ் ரிஷி, துளசி, ஆகுதி பிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.நாராயணா, சந்திரபோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு    –  ஆண்ட்ரூ
இசை    –   ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடல்கள்    –   மீனாட்சி சுந்தரம், சுவாதி, அருண் பாரதி, திருமலை மோகன், மோகன் SBI
எடிட்டிங்   –   கே.வெங்கடேஸ்வரராவ்
கலை   – அசோக்
நடனம்   –  ராஜுசுந்தரம், பிருந்தா
ஸ்டன்ட்    –  பீட்டர் ஹெய்யின்
இணை தயாரிப்பு  –  சத்யா சீத்தாலா, வெங்கட்ராவ்
தயாரிப்பு    –   பத்ரகாளி பிரசாத்
இயக்கி இருப்பவர்  –  கருணாகரன்
வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ARK. ராஜராஜா
படம் பற்றி ARK.ராஜராஜாவிடம் கேட்டோம்…
இளம் காதல் கதையாக உருவாகி உள்ளது. பிரபாஸ்  –  காஜல் அகர்வால் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க நினைகிறார்கள். அப்படி சந்திக்கிறவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் எப்படி காதலர்களாகிறார்கள் என்பது வருஷம் 16 மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதுடன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. என்றார் ARK. ராஜராஜா.

More articles

Latest article