prabhakaran

டி.வியில் காட்டப்பட்டது பிரபாகரனின் உடல் அல்ல! அவர் உயிருடன் இருக்கலாம்: இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி

கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல”  என்று  பேராசிரியர் எம்.சுப்ரமணியம் ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

இவர், ஓய்வு பெற்ற பேசாரசிரியர் மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர்.  இவர், இணையதள இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், “ இந்தியாவோ  இலங்கையோ  இதுவரை  பிரபாகரனின் சரியான ஒரு இறப்பு சான்றிதழ் மற்றும் மரபணு பரிசோதனை சான்றிதழ்களை வழங்கவில்லை” என்றார்.

மேலும் அவர், “பலரும்  கூறுவதை போன்று பிரபாகரன் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழப்பதற்கான   வாய்ப்பு  இல்லை.    அப்பபடி நடந்திருந்தால், ஒரு முறையான கைரேகை அல்லது மரபணு பரிசோதனை இருந்திருக்கும்.

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பாக இந்தியா வற்புறுத்தியதால், இலங்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் வெறும் அறிக்கை ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. அது வெறும் அறிக்கை மாத்திரமே,  மரண சான்றிதழ் அல்ல.

இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் “புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே 17 அன்று நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் கடைசி நாளில் கொல்லப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.  அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் எனவும் இது தொடர்பிலான வழக்குகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம்” என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரபாகரனின் மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அத்துடன் மரணித்ததற்கான சான்றிதழ்களும் இல்லை.

ஆகவே ,  பிரபாகரன் போன்ற புகைப்படத்தை பொதுமக்களுக்கு காட்டியிருக்க வாய்ப்பிருக்கிறதே! ஆகவே அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.