பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தோம் : சிவசேனா எம் பி

Must read

மும்பை

சிவசேனா கட்சி வட இந்தியாவில் போட்டியிடாமல் பிரதமர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததாக அக்கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் மற்ரும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து  ஆட்சியைப் பிடித்துள்ளது.  அப்போதிலிருந்தே பாஜக – சிவசேனா இடையே மோதல் போக்கு  நிலவி வருகிறது.   சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவசேனாவை தனியாகப் போட்டியிடத் தயாரா எனச் சவால் விட்டார்.

இதையொட்டி சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே,< “இந்த சவாலை சிவசேனா ஏற்றுக் கொள்கிறது.  பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்ததால் பல முறை நாங்கள் வாய்ப்பு இழந்தோம்.  எங்கள் தந்தையார் பால் தாக்கரே உருவாக்கிய  இந்துத்துவா என்னும் பெயரையா குறி வைத்து பாஜக எங்களை ஏமாற்றி 23 ஆண்டுகளை அழுக வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம் பி யும்  செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம், “பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வட இந்தியாவில் சிவசேனாஅ அலை மிகவும் அதிகமாக இருந்தது.  அப்போது நாங்கள் வட இந்தியாவில் இருந்து போட்டியிட்டிருந்தால் சுலபமாகப் பிரதமர் பதவியைப் பெற்றிருப்போம்.  ஆனால் பாஜகவுக்கு அதை விட்டுக் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளா

More articles

Latest article