F16 for pak
பாகிஸ்தானுக்கு 8 நவீன போர் விமானங்கள்
வாஷிங்டன்:
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 8 எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா அரசானை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதம் தாங்கி, எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட அதி நவீன எப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய  அமெரிக்கா முடிவு செய்திருந்தது. இதற்கு இந்தியா, அமெரிக்க எம்.பி.க்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எட்டு எப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் வேண்டுகோளின்படி அந்த 8 விமானங்களும் 70 கோடி டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.