ஆறுதல் கூறும் ம.தி.மு.க. பிரமுகர்கள்
ஆறுதல் கூறும் ம.தி.மு.க. பிரமுகர்கள்

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவின் வீடு நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டது.  தாக்குதலில் அவரது கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல் உடைந்தது. “ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும்,  அ.தி.மு.கவினர்தான் இதற்குக் காரணம்  என்றும்” பழ. கருப்பையா குற்றம் சாட்டினார்.
இந்தத் தாக்குதலை தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்திருக்கிறார்கள்.  கருணாநிதி விடுத்த அறிக்கையில், “இப்படிப்பட்ட வன்முறையும், அநாகரீகமும் கலந்த நிகழ்ச்சிகளைப்  பார்க்கும்போது,   நாம் ஜனநாயக  நாட்டில் தான் வாழ்கிறோமா,  கடும் புலி  இருக்கும் காட்டில் வாழ்கிறோமா, காவல் துறை என்ன தான் செய்கிறது, கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா,  தனி மனிதச்சுதந்திரத்தின் மீது ஏன் இந்தப் பாய்ச்சல்  என்ற கேள்விகள்  தான் எழுகின்றன.    ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆளுங்கட்சியைப் பற்றியோ;    பேசினாலோ, எழுதினாலோ அவர்களைத் தாக்குவது,  அவதுhறு வழக்குகளைப் போடுவது என்ற பாணியில் அரசியல் நடப்பது பொது அமைதிக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்.      இப்படிப்பட்ட போக்கினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக  வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன், “அதே ரத்தம்! (அந்த நாடகம். இந்த மேடையில்)” என்ற தலைப்பில் முகநூலில் எழுதியுள்ள பதிவு, கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த பதிவு இதோ:
“2010-ம் ஆண்டு தி.மு.க நடத்திய செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார் பழ. கருப்பையா. துக்ளக் வார இதழில் ‘திராவிடத்தின் இரண்டாவது சிசு ஜெயலலிதா’ என்று கட்டுரைகூட எழுதினார். அப்படியான நேரத்தில்தான் இவரது வீட்டை சிலர் தாக்கினார்கள். தி.மு.க. வை விமர்சித்தேன், அதனால் இப்படி செய்து விட்டார்கள் என்று கூறினார்.

செம்மொழி மாநாட்டை விமர்சித்ததால்தான் அடித்தார்கள் என்றால், அந்த காலகட்டத்தில் பழ. கருப்பையாவைவிட மிக கடுமையாக செம்மொழி மாநாட்டை விமர்சித்திருந்தார் தமிழருவி மணியன். ‘இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த துரோகத்தை மூடி மறைக்கு ஜமுக்காலம்தான் அந்த மாநாடு’ என்றார்.
அதைவிட தோழர் தியாகு, புகழேந்தி தங்கராஜ், பெ.மணியரசன் உள்ளிட்ட பலரும் அப்படி விமர்சித்திருந்தார்கள். கவிஞர் தாமரை காய்ச்சி எடுத்திருந்தார்.
ஆனால் பழ.கருப்பையா மட்டுமே தாக்கப்பட்டார்.?
அப்போதும் இதே போன்றுதான் தி.மு.க.வை தவிர்த்து மற்ற கட்சிகள் எல்லாம் அவருக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்தது. பிறகு விசாரித்தபோதுதான் ஒரு ‘பஞ்சாயத்து’ தெரியவந்தது. அவர் இருக்கும் வீடு அவரது படத் தயாரிப்பு அலுவலகம். கலைஞர் கதை வசன படம் ஒன்றையும் தயாரித்திருந்தார். அந்த அலுவலகத்தில் ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அப்படியே வழக்கு போட்டு அந்த வீட்டிலேயே தங்கிக்கொண்டிருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர்தான் அப்போது ஆட்களை கொண்டுவந்து தாக்கியிருக்கிறார் என்று இதே தி.மு.க தரப்பும் போலீஸ் தரப்பும் சொன்னது…
அடிப்பவர்கள் யாராவது கட்சிக்கொடியோடு போய் பெயரை சொல்லி அடிப்பார்களா? என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.
இப்போதும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் கட்சிக்காரர்கள்தான் தாக்கினார்களா, அல்லது வீட்டுப் பிரச்சனையில் தாக்கினார்களா என்பது கேள்விக்குறி என்கிறது புதிய தகவல்…
அந்த நாடகம் இந்த மேடையிலா..? அரசியல் பரபரப்பை சொன்னேன்….
பொருத்திருந்து பார்ப்போம்!” என்று பா. ஏகலைவன் தனது பதிவில் கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு மே மாதம், தனது வீட்டில் புகுந்த மர்ம கொள்ளையன் தனது மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கலியை பறித்துச் சென்றுவிட்டான் என்று பழ. கருப்பையா கூறியதும் குறிப்பிடத்தக்கது.