பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்…!

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி (87) சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் தான் சீதாலட்சுமி. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் காலமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மேல் ஆணை , அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்த கண்ணீர், ரஜினிகாந்துடன் அன்புக்கு நான் அடிமை, தனுஷ்வுடன் சீடன், ஹிந்தியில் திலிப் குமாருடன் இரும்பு திரை உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர் இவர்

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்ற பெருமைக்குரியவர்..

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: jayalalitha, mgr, rajini, SeethaLakshmi, Shivaji
-=-