சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு சென்னை புறநகரான சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜூலை 25 2012 ஆம் ஆண்டு பள்ளி பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எந்த பேருந்தில் தனது மகளை ஆசையாக பள்ளிக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த பேருந்தே ஸ்ருதிக்கு எமனாக மாறியது. அந்த பள்ளி பேருந்தின் அடியில் பெரிய ஓட்டை இருந்ததால், அதன் வழியாக குழந்தை ஸ்ருதி கீழே விழுந்து பலியானது.

இந்த விவகாரத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்து, 8 பேரை கைது செய்தது. அதன்படி  பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கைதான 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.  10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் 8 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.