பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள்

Must read

பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள்

செங்கல்பட்டு அருகே திருவடி சூலம் என்ற இடத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம் மறுவி தற்போது திருவடி சூலம் என்று அழைக்கப்படுகிறது.

கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீ சக்கரம் போலத் தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, அனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பௌர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

ஸ்ரீ மஹா ருத்ர பைரவர் :-

ஈசனின் 64 திருமேனிகளில் ஒருவர் தான் பைரவர். பிரம்மாவின் தலைக் கனத்தைப் போக்க உருவாகப்பட்டவர் தான் இந்த பைரவர். பைரவர் காவல் தெய்வமாகப் பார்க்கப்படுகின்றார். உலகத்தில் உள்ள உயிர் மற்றும் உடைமைகளைக் காக்கக் கூடியவர்

ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் சிறப்பம்சம் :-

கோயிலின் அனைத்து பகுதியும் மிக துல்லியமான ஆகம விதிப்படி அமைந்து பூமியின் நிலைப்பாட்டை உணர்த்துகின்ற ஆலய கட்டுமான தரிசனத்தை இங்குக் காணலாம்.

பிறவியின் பாபகர்ம தோஷங்களை நீக்குகிறவர் தான் இந்த பைரவர்.

இயல்பான முறையில் சீர்திருத்தம் கொண்ட தரிசன முறை இந்த கோயிலில் காணலாம்.

கடவுளுக்குக் கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராகக் காட்சி தருகின்றார்.

வனச்சரக மூலிகை வனம் ஒட்டி இயற்கையோடு சுவாசம் செய்யும் வகையில் கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் பாலகன் தோற்றத்தில் க்ஷேத்திர பால பைரவர் காட்சி தருகின்றார்.

பிறவியில் அடைந்த ஜனன முறைகளுக்கு விமோசன பலன்! (அரிசி கொண்டு வருதல்).

பைரவ காயத்ரி மந்த்ரம் :-

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

கோயில் முகவரி :-

ஸ்ரீ பைரவர் ருத்ர ஆலயம்,
ஸ்ரீ பைரவர் நகர், ஈச்சங்காரணை,
பட்ரவாக்கம், திருவடி சூலம் ரோடு,
மகேந்திரா வேர்ல்டு சிட்டி,
செங்கல்பட்டு, தமிழ் நாடு – 603002

More articles

Latest article