டில்லி:

பசு பாதுகாவலர்கள் விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள்மீதுபசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த மத்தியமாநிலஅரசுக்களுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளார் தூஷார் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்“பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயர் அதிகாரியை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யவேண்டும். பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை இந்த அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறைகளை தடுக்க தவறிய மாநில அரசுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை மத்தியஅரசுஆய்வு செய்ய வேண்டும்” என்றுஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்நிலையில் தூஷார் காந்தி பசு பாதுகாவலர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் பின்பற்றவில்லை என்று அவதூறு வழக்குஒன்றை, தாக்கல் செய்தார். இதையடுத்துஉச்சநீதிமன்ரம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள்இந்தவிவகாரம்குறித்துஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ்அனுப்பியுள்ளது.