நெட்டிசன்:Abdul Hameed Sheik Mohamed

Must read

manushya puthiran:
அரசு கேபிளில் புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைககாட்சிகள் தெரியவில்லை என நண்பர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் சன் நியூஸ் வருவதில்லை. இன்றைய தமிழக அரசு ஏறகனவே வகைதொகையற்ற வகையில் அவ்தூறு வழக்குகளைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள மற்றும் ஊடகங்களின் குரல்வளையை நெறித்து வருகிறது.

அச்சு ஊடகங்களின் பெரும்பாலானவற்றை பல் வேறு வழிகளில் கட்டுப்படுத்துவதுபோல தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் அதன் ’டைனமிக’ கான தன்மைதான். காட்சிகளையும் கருத்துக்களையும் முற்றாக இருட்டடிப்பு செய்வது தொலைக்காட்சியில் கடினம். என்னைப் போன்றவர்கள் ஊடகங்கள் இயங்க முடிவது இந்தப் புள்ளியில்தான்.

தனக்கு ஒவ்வாத காட்சிககளும் க்ருத்துக்களும் இடம் பெறுவதை தடுப்பதற்காக தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கேபிளில் இப்படி தொலைக்காட்சி அலைவரிசைகளை தடுக்கும் அல்லது பின்னுக்கு தள்ளும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபடுகிறது.

ஒரு எதேச்சதிகார அரசு ஊடகங்களை தடுப்பது எளிது. ஆனால் நாளை மக்கள் உங்களுக்கு எதிராக அலை அலையாக தெருவுக்கு வருவார்கள். அதை உங்களால் தடுத்து நிறுத்த இயலாது

முகநூல் பக்கம் :https://www.facebook.com/manushya.puthiran/posts/1173449459347630?pnref=story

 

More articles

11 COMMENTS

Latest article