நெட்டிசன்: வைகோ – விபத்து – வதந்தி… காரணம் என்ன?

Must read

netd
 
வைகோ வாகனத்தில் அடிபட்டு இருவர் மாண்டதாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தி உண்மையா என்று அதை எனக்கு அனுப்பிக் கேட்டார் அக்கா. அடுத்தடுத்த நொடிகளில் அது உண்மையல்ல என்று உறுதி செய்துவிட்டு பதிலும் அனுப்பிவிட்டேன். ஏனெனில் இது போல் சாலையில் அடிபட்டவர்களுக்கு, பரிதவிப்பவர்களுக்கு தங்கள் வாகனத்தைக் கொடுத்துதவது எப்போதும் நடப்பதுதான். தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரின் பயணத்திலும் இப்படி பல முறை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒளிப்படங்கள் எடுக்க ஆளைத்தேடிக் கொண்டிருப்பதில்லை.

தனக்கே உண்மை என்று தெரியாத அடிப்படையற்ற செய்திகளைப் பரப்பும் புரளித்தனம் ஒரு வித மனவியாதி. குறுகிய நேரத்தில் பரவும் தவறான தகவல் – மறுப்போ, உண்மையோ வெளிவந்தபின்னும் கூட உலவிக்கொண்டே இருக்கும். அப்படித்தான் இன்றும் பல பொய்த் தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. உரிய முறையில் நாம் அதற்கு பதிலளித்திருந்தாலும்!
ஆனால், இந்தப் படத்தைப் பார்த்த போது வேறொரு செய்தி உறைத்தது. வாட்ஸ் அப்பில் உலவிய படத்தில் அடிபட்டவர்கள் இருவரோடு வைகோ அவர்கள் மட்டும் துக்கத்தில் வாய் பொத்தியபடி நிற்கும் படம் வெளிவந்தது. பத்திரிகையில் வந்த படத்தில் தான் சுற்றி ஆட்கள் நிற்பது போலவே காட்சி புலப்படுகிறது. இது தேர்தல் நேரம் தான்… அதற்காக இப்படி போஸ் கொடுத்துக் கொண்டு நின்றால், அது புரளிகளுக்கு வழிவகுக்கவே செய்யும். இப்படியா அண்ணன் வைகோவை தனியில் அனுப்புவது. கூட ரெண்டு பேராவது போய் நிற்பதில்லையா?
– Prince Ennares Periyar ( முகநூல் பதிவு)

More articles

Latest article