நெட்டிசன்: பிரேமலதாவுக்கு நாவடக்கம் தேவை !

Must read

1
 

 
மூத்த பத்திரிகையாளர திருஞானம் (Thirugnanam Mylapore Perumal )  அவர்களின் முகநூல் பதிவு:
“கருணாநிதி மீதும்  ஜெயலலிதா மீதும்  உள்ள கோபத்தில்  மாவீரனாக வாழ்ந்து  அமெரிக்கசூழ்ச்சியால் வீழ்ந்த சதாம் உசைனை   கிரிமினல் என்பதாக பழிக்கிறார் பிரேமலதா. இது தவறல்லவா ?
O
ஈராக் அதிபர் சதாம் உசேன் – இந்தியாவின் நண்பர் !   உயர்ந்த கொள்கைவாதி !  அமெரிக்க அரசு
பொய்யான குற்றம் சாட்டி,   ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்த பிறகு, அன்றைய பிரதமர் வாஜ்பாய்யிடம் –   அணிசேரா நாடு [ NAM ]   தத்துவ விளக்க சர்வதேச மையத்தின் –   நிறுவனர் – தலைவரான   வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்துச் சொன்னார் !
[இந்த INTERNATIONAL INSTITUTE OF NON-ALLIED STUDIES அமைப்பு, இந்திராகாந்தியின் ஆலோசனைப்படி, வாழப்பாடியாரல் உருவாக்கப்பட்டது ]
பிரதமர் வாஜ்பாய் அனுமதி பெற்று,  ஏராளமான உயிர்காக்கும் மருந்துகளுடன்   40 LEYLAND பேருந்துகளை   இந்தியா – ஈராக்குக்கு ரகசியமாக அனுப்பியது !
இதன் பொருட்டு நன்றி சொல்ல,   இந்தியப் பிரதமரையும் – வாழப்பாடியாரையும்
ஈராக் அதிபர் அழைத்தார் !
ஆனால்,   மத்திய பெட்ரோலியம் அமைச்சரான  வாழப்பாடியார் மட்டும் ஈராக் சென்றார் !
பாக்தாத் விமான நிலையத்தில்,  பலத்த பாதுகாப்புடன் –  வாழப்பாடியாருக்கு வரவேற்பு நடந்தது !
பூமிக்குக் கீழே – ரகசியமாக –   NASAவின் வேவு கண்களில் சிக்காதபடி  சதாம் உருவாக்கிய சுரங்க மாளிகையில் –   மூன்று நாட்கள்,  சதாமின் விருந்தினராக தங்கினார்,  வாழப்பாடியார் !
வாழப்பாடியார் – சதாமை சந்தித்தார் !
அப்போது அந்த காட்சியைப் பார்த்து,  ”எனது நண்பர் வாழப்பாடியார்,  சதாம் உசேனுடன் கை குலுக்கும் காட்சியப் பார்த்து, மெய் சிலிர்த்துப்போனேன் ” என்றார், கருணாநிதி !
ஏனென்றால்,  கடந்த 10 ஆண்டுகளில்,  சதாமை சந்தித்த ஒரே நபர்,  எனது நண்பர் வாழப்பாடியார் !
அதுவரை, எந்த நாட்டுத் தலைவரும்   தூதரும் அவரை நேரில் சந்தித்தது இல்லை !
சதாமின் அமைச்சர்கள்  INTERCOM / TELE-CONFERENCE வழியாக மட்டுமே –  சதாமிடம் ஆணை பெற்று ஆட்சி செய்தனர் !
அதாவது,  சதாமின் அமைச்சர்களே,  10 ஆண்டுகளாக சதாமை நேரில் பார்க்கவில்லை !
”வாழப்பாடியார் – ரகசியம் காப்பார்.   அமெரிக்காவிடம் விலைபோகமாட்டார்..” என்று,
பாலஸ்தீன விடுதலை இயக்க [ PLO ] தலைவர் யாசர் அராபத் வழியாக  அறிந்திருந்ததனால்,
சதாம் உசேன்,   தனது விருந்தினராக –  மூன்று நாட்கள் வைத்திருந்தார் !
இந்த நிகழ்வு, உலகத் தமிழரிடையே   வாழப்பாடியாரை மிகவும் நேசிப்பை   உருவாக்கியது !
உலகில் எவருக்கும் கிடைக்காத மரியாதை இது !
O
ஒரு மாவீரனை   கிரிமினல் என்று சித்தரித்த  பிரேமலதா  மன்னிப்பு கோரவேண்டும் !

More articles

Latest article