நீதிபதி பதவிக்கான வருமான வரம்பு நீக்கம் : கொலிஜியம் தீர்மானம்

Must read

டில்லி

யர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 7 லட்சம் வருட வருமானம் இருக்க வேண்டும் என்னும் விதியை உச்சநீதிமன்ற கொலிஜியம் நீக்கி உள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் அமைந்துள்ள கொலிஜியம் பரிந்துரை செய்கிறது. அதன் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் அந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கிறது. இவ்வாறு பரிந்துரை செய்யப்படுவதற்கு கொலிஜியம் ஒரு சில விதிகளை பின்பற்றி வருகிறது.

அதில் ஒரு விதியாக உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்படும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 7 லட்சம் வருட வருமானம் இருக்க வேண்டும் என்னும் விதி உள்ளது

இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் கூடிய கொலிஜியம் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை முடிவில் ஒரு தீர்மானம் இயற்றாப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியத்தினால் பரிந்துரை செய்ய விரும்புவோர் பலருக்கு குறைந்த பட்ச வருமானமான ரூ.7 லட்சத்துக்கும் குறைவாகவே வருகிறது. எனவே திறமையுள்ள இளைஞர்களுக்கும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்க கொலிஜியம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த குறைந்த பட்ச வருமானம் ரூ.7 லட்சம் இருக்க வேண்டும் என்னும் விதி நீக்கப்படுகிறது” என தெரிவிக்கபட்டுள்ள்து.

More articles

Latest article