chennai-floods-_647_111715112315

ழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்துள்ள வேளையில், மேலும் இரண்டு நாள் மழை பெய்யும் என இயற்கை ஆய்வாளர் மழைராஜூ தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இவர் கணித்ததுச் சொல்லியது போல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

நாளை மற்றும் மறுநாள் மழை பெய்யும் என்று தனது முகநூல் பக்கத்தில் மழை ராஜூ தெரிவித்துள்ள பதிவாவது:

“முகநூல் நபர்களுக்கு காலை வணக்கம்.

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில், மழை பற்றிய தகவலை பகிர்ந்துகொள்ள தயங்குகிறேன். எனது முகநூல் பக்கத்தில் உள்ள நண்பர்கள் தயவு செய்து மக்களை பயமுறுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்கள், உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

ராஜூ
ராஜூ

வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. தற்போது பெய்யும் மழை டிசம்பர் 9 வரை தொடர வாய்ப்புள்ளது. கடலூர், காரைக்கால், பகுதிகளில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அரியலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் மழையின் தாக்கம் காணப்பட்டாலும், தற்போது மேகங்களின் பாதையில் மாற்றம் காணப்படுவதால் மிக பலத்த மழைக்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஒருசில இடங்களை தவிர வங்க கடலோர பகுதிகளில் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைந்துவிடும்.

– இயற்கை ஆய்வாளர் மழைராஜு, பெரம்பலூர்.”