”நான் பிரதமரானால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்“- குர்மேஹர் கவுர்

” நான் பிரதமரானால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் “ என இளம் பெண் எழுத்தாளரும், மாணவருமான குர்மேஹர் கவுர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எவ்வாறு பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்பதனை அவர் தெரிவிக்கவில்லை. குர்மேஹர் கவுரின் இந்த நம்பிக்கை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

gurmehar

அமைதிக்காக போராடி வரும் இளம் எழுத்தாளரான குர்மேஹர் கவுர் “ ஸ்மால் ஆக்ட் ஆஃப் ஃப்ரீடம் “ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். முதல் முறையாக ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற குர்மேஹர் கவுர் தான் எழுதிய புத்தகம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனது புத்தகத்தின் இறுதி பாகம் குறித்து விளக்கினார். அந்த பாகம் முழுவதும் காஷ்மீர் பிரச்சனை குறித்து குர்மேஹர் விளக்கியுள்ளார். மேலும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எதிக்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக குர்மேஹர் தெரிவித்தார். காஷ்மீர் பகுதியில் தனது சிறுவயதில் எதிக்கொண்ட இன்னல்கள் குறித்தும், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வாழ்க்கை முறை குறித்தும் புத்தகத்தில் கூறியுள்ளார் குர்மேஹர்.

மேலும், தனது புத்தகத்தில் ”நான் பிரதமரானால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் “ என்று குர்மேஹர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு எழுதப்பட்டது குறித்து சிலர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து பேசிய குர்மேஹர் “ முற்றிலும் மனித நேய கண்ணோட்டத்தில் இருந்து காஷ்மீர் பிரச்சனைக்கு நான் தீர்வு காண விரும்புகிறேன். பிற்காலத்தில் எந்த குழந்தையும் அவரது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட கூடாது. வெறுப்பு நிறைந்த சூழலில் எந்த ஒரு குழந்தையும் வளரக்கூடாது “ என்று கூறினார்.

அரசியலில் இளைஞர்கள் பங்கேற்பு குறித்து கூட்டத்தில் பேசும்போது, இளம் அரசியல்வாதிகள் உருவாவதற்கும், நாட்டின் விதியை மாற்றி அமைப்பதற்கு சில காலம் தேவைப்படும் என குர்மேஹர் தெரிவித்தார்.

தற்போது தனது அடுத்த புத்தகமான ”அரசியலில் இளைஞர்கள்” என்ற நூலை எழுதுவதில் குர்மேஹர் ஈடுபட்டுள்ளார். அரசியல் மற்றும் காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த குர்மேஹருக்கு சமூக வளைதளாங்களில் எழும் எதிர்வினைகளை மாணவர் அமைப்பை சேர்ந்த ரஷித் கவனித்து வருகிறார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-