பழம்பெரும் திரைப்பட நடிகை நாட்டிய தாரகை குசலகுமாரி அவர்கள் மறைவு.

எம்.ஜி.ஆர். – சிவாஜி இணைந்து நடித்த டி.ஆர்.ராமண்ணாவின் ” கூண்டுக்கிளி ” படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களில் ஒருவர் பி.எஸ்.சரோஜா ( இவர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மனைவி ) மற்றொருவர் தற்போது மறைந்த குசலகுமாரி அவர்கள்.

250 படங்களுக்கு மேல் இவர்களுடைய நடனங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரேம்நசீர், நாகேஸ்வரராவ், உட்பட அனைவருடனும் நடித்தவர்.

மறைந்த முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் நட்பு பாராட்டினார்கள்.

பராசக்தி, கொஞ்சும் சலங்கை, ஹரிச்சந்திரா போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

நடிகை சாவித்திரி அவர்களுக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்று திரைப்பட துறையினரால் பேசப்பட்டவர்.

நந்தனம் பழைய கிளாக் டவர் 6 வது மாடியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று மதியம் 1 மணிக்கு குசலகுமாரி அம்மா அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெற்றது