நடிகர் சங்கத்தில் தேர்தல்
நடிகர் இல்லாதவங்களுக்கும் ஓட்டு!: நேற்று விசால் சொன்னார்.. 16ம் தேதியே patrikai.com சொன்னது
நேற்று நடந்த நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவின் போது விஷால் தாக்கப்பட்டார். அவரது கையில் காயம் ஏற்பட்டது. “என்னைத் தாக்கியவங்க நடிகர்களே கிடையாது… அவங்களை நான் சினிமாவில பார்த்ததே இல்ல.. அவங்க எப்படி வாக்குச்சாவடிக்குள்ள வந்தாங்க..” என்று பதட்டத்துடன் கேட்டார் அவர்.
இந்த விஷயத்தை.. அதாவது நடிகர் அல்லாதவர்களும் நடிகர் சங்க அட்டை வைத்து ஓட்டுப்போட உரிமை பெற்றிருப்பதை… கடந்த 16.10.15 அன்று நமது patrikai.com இதழில் வெளியிட்டோம்.
அந்த செய்தி கட்டுரையில், “ கடந்த பல வருடங்களில் சரத், ராதாரவி ஆகியோர் தங்களது வீட்டு வேலையாட்கள், நெருங்கிய உறவினர்கள் பலருக்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடிப்பது இல்லை வெவ்வேறு துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஓட்டு அனைத்தும் சரத் -ராதாரவி அணிக்குத்தான்” என்றும் சொல்கிறார்கள்.
நாம் சந்தித்த நடிகர் ( சங்க அட்டை வைத்திருப்பவர்) ஓட்டல் ஒன்றில் பணியாற்றுகிறார்.
“வாக்கெடுப்பு அன்று வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தாலே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சட்டப்படி இவர்கள் ஓட்டுரிமை உள்ளவர்கள் என்பதால் விசால் அணியினரால் எதுவும் செய்ய முடியாது” என்றார் மூத்த துணை நடிகர் ஒருவர்.”
இந்த விவகாரங்களை நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட கட்டுரையில் சொல்லியிருந்தோம். இப்போது விஷால் அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இனியாவது நடிகர்கள் அல்லாதவர்களை சங்கத்திலிருந்து களையெடுக்கும் நடவடிக்கையை அவர்கள் எடுக்கட்டும்.
கடந்த 16ம் தேதி patrikai.com கட்டுரையை முழுதும் படிக்க…
விஷால் vs சரத்: வெற்றி யாருக்கு?