தொகுதிகள் மாற்றம் மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிகள் பரிமாற்றம்

Must read

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் சில தொகுதிகளை பரிமாற்றிக் கொண்டன.
விஜயகாந்துடன் கூட்டணி தலைவர்கள்/ மனநல மருத்துவர் ருத்ரன்
 
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏற்கெனவே உடன்பாட்டின்படி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் தொகுதி மதிமுகவிற்கும், மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.

More articles

Latest article