சென்னை:

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிசன் அறிவித்ததாக நேற்றிலிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு பதிவு பரவி வருகிறது. அதேபோல மே 8ம் தேதி வாக்குப்பதிவு என இன்னொரு பதிவு பரவி வருகிறது.

இதில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் : ஏப்ரல் 13, வேட்பு மனு தாக்கல் துவக்கம் : ஏப்ரல் 13, வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 20வேட்பு மனு பரிசீலனை : ஏப்ரல் 21 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : ஏப்ரல் 24 வாக்குப் பதிவு நடைபெறும் நாள் : மே 8 வாக்கு எண்ணிக்கை : மே 11” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு பதிவுகளையும் பலரும் பரபரப்புடன் பகிர்ந்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் இருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் இப்படி ஓர் பதிவு பரவுவது அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, அவர் இந்த வாட்ஸ்அப் பதிவுகளை மறுத்தார்.

“தேர்தலுக்கு கமிசன் தயாராகி வருகிறது. தேவையான பொருட்கள் வாங்க டென்டர் விடப்பட்டிருக்கிறது. தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் நடந்து வருகிறது. ஆனால் தேர்தல் தேதி குறித்து எந்த வித அறிவிப்பையும் கமிசன் அறிவிக்கவில்லை. இது போன்று பரவும் பதவுகளை நம்ப வேண்டாம்” என்று அவர் கூறினார்.