index

 

மொழி, அபியும் நானும், பயணம் என தரமான படங்களை தொடர்ந்து அளித்த ராதாமோகனுக்கு திருஷ்டி பட்டுவிட்டது போலும்.. அதுதான் இந்த உப்புகருவாடு!

படத்துக்குள் படம் எடுக்கிறார்கள்.. அதை எடுத்தார்களா என்பதுதான் கதை. அதற்குள் நம்மை படாதபாடுபடுத்திவிடுகிறார்கள்.

கருணா, படம் எடுக்க வாய்ப்பு தேடி வருகிறார். மயில்சாமி மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. எஸ்.எம். பாஸ்கர்தான் படம் தயாரிக்கிறார். அவரது மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்பது நிபந்தனை.

அதற்கு ஒப்புக்கொண்டு படம் எடுக்க தயாராகிறார்கள். எதிர்பார்த்தபடியே, அந்த ஹீரோயின், அஸிஸ்டெண்ட் டைரக்டருடன் ஓடிவிடுகிறார். அப்புறம் களேபரமாகி, பிறகு சுபம்.

பாத்திரங்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. எஸ்.எம்.பாஸ்கர் பேசும் பல வசனங்கள் நகைச்சுவையா, சீரிஸா என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே அடுத்தகாட்சி வந்துவிடுகிறது.

அவருடன் சாமியாரா வருபவர் உட்பட பலரும் கம்ப்யூட்டருக்குள் புகுந்த வைரஸாக துன்புறுத்துகிறார்கள்.

பாடல், இசை, ஒளிப்பதிவு என்று எதுவும் சொல்லும்படி இல்லை.

தப்பாக இங்கீஸ் பேசுவதை நகைச்சுவை என்று இன்னும் எத்தனை படத்துக்கு காண்பிப்பார்களோ..

ஜாம்வான்கள் இருந்தும், இந்தும் தோற்கும் இந்திய கிரிக்கெட் டீம் மாதிரி,  சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்கள என்று  இருந்தும் சக்கையாக தோற்றிருக்கிறார்கள்.