சென்னை,
ட்டசபை எதிர்கட்சியான தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில்  த.மா.கா. பங்கேற்கும் என ஜி.கே.வாசன் கூறினார்.
 
காவிரிநதிப்  நீர்ப்பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி திமுக நடத்தும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் த.மா.கா சார்பில், தான் கலந்துகொள்ளப் போவதாக ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
gk-vasan
அவரது அழைப்பை ஏற்று காங்கிரஸ், த.மா.கா, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளது.
இதற்கிடையில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காது என அறிவித்தார். ஆனால், கூட்டணியில் உள்ள திருமாவளவனோ அனைத்துகட்சி கூட்டத்தில் பங்கேற்கலாம் என அறிவித்தார். இதன் காரணமாக மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் சென்னை தமாகா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய ஜி.கே.வாசன்,
தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும்,  அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் டெல்டா விவசாயிகளின் உயிர் நாடிப் பிரச்சனை என்ற அடிப்படையில் திமுக கூட்டும்  அனைத்துக் கட்சிக. கூட்டத்தில்  தமாகா கலந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்த  அனைத்துக் கட்சிக் கூட்டம் அமையும் எனவும் வாசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கலந்துகொள்ளாது என ஏற்கனவே அறிவித்து விட்டது.