தாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் கழிப்பிடத்துக்கு 40,000 டாலர் செலவு

Must read

தாய்லாந்து இளவரசியான மஹா சக்ரி சிரிந்தோர்ன்
தாய்லாந்து இளவரசியான மஹா சக்ரி சிரிந்தோர்ன்

பாங்காக்:
தாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் பயன்பாட்டுக்கு 40 ஆயிரம் டாலர் செலவும் செய்து கழிப்பிடம் அமைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து இளவரசியான மஹா சக்ரி சிரிந்தோர்ன் மூன்று நாள் பயணமாக கம்பாடியா நாட்டுக்கு சென்றார். அங்கு ரத்தனகிரி மாகாணத்தில் புகழ்பெற்ற ஏரிக்கு ஒரு நாள் இரவு ரசிப்பது அவரது பயண திட்டத்தில் முக்கிய அம்சமாக இருந்தது.
இதற்காக அந்த ஏரி அருகே 40 ஆயிரம் டாலர் செலவில் ஒரு கழிப்பிடம் அமைக்கப்பட்டது.
இந்த கழிப்பிட விவகாரம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரத்தனகிரி மாகாணம் ஒரு ஏழ்மையான மாகாணமாகும். ஒரு நாள் இளவரசியின் வருகைக்கு இவ்வளவு செலவு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு இளவரசி வந்து சென்ற பிறகு இந்த கழிப்பிடத்தை இடித்துவிடும் திட்டமும் உள்ளது.
இளவரசி வந்து சென்ற பிறகு இந்த கழிப்பிட கட்டடத்தை ஏதேனும் ஒரு அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கழிப்பிடமாக தொடர்ந்து பயன்படுத்த முடியாது. ஏனென்றால் ஒரு அரசர் பயன்படுத்திய கழிப்பிடத்தை சாதாரண மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது என்கின்றனர் அதிகாரிகள்.
சாதாரண ஒரு நல்ல கழிப்பிடம் கட்ட செலவாகும் தொகையை விட 130 மடங்கு அதிகமாக இந்த இளவரசியின் ஒரு நாள் பயன்பாட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article