மீப காலமாகவே, தாய்மார்கள், பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தருவது குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

“இது தவறான கருத்து. தாய்ப்பால் தருவதால் அழகு கெடாது” என மருத்துவர்கள் தெரிவித்தும் பயனில்லை. இந்த நிலையில் தாய்மார்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக நடிகை கஸ்தூரி, பெண்களுக்கான மருத்துவ புகைப்படங்களை வெளியிடும் இதழுக்கு,  தான் குழந்தைக்கு பால் தருவது போன்ற படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இந்த இதழில் பேட்டி அளித்திருக்கும் கஸ்தூரி,   “குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். குறிப்பாக தாய்ப்பால் தருவதால் முன்னழகு குறைந்துவிடுவதாக தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், நான் என் குழந்தையுடன் போஸ் கொடுத்தேன்” என்று கஸ்தூரி கூறுகிறார்.