தலை தொங்கிய தல ரசிகர்கள்!

Must read

ajith

ரபரப்பை எகிற வைக்க வேண்டும் என்பதற்காக, அஜீத்தின் புதிய படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடத்தினார்கள். (அடையாளப் பெயராக தல 56 என்று குறிப்பிட்டு வந்தார்கள்.)

இப்போதுதான் “வேதாளம்” என்ற டைட்டிலை அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால் தலைப்பை கேட்டவுடன் அஜீத் ரசிகர்கள் முகம் சுருங்கிவிட்டார்கள்.

“படத்தின் பெயர் ரொம்ப ஓல்ட் மாடலா(!) இருக்கு.. அதோட படத்து போஸ்டர்கள்ல இருக்கிற அஜீத், பழைய ரெட் படத்து அஜீத் மாதிரியே இருக்காரே” என்று பயப்படுகிறார்கள்.

அஜீத் பட வரலாற்றிலேயே அவரும் சரி, ரசிகர்களும் சரி… மறக்க விரும்பும் படம், ரெட்.  அந்த படத்தில் தொந்தியும் தொப்பையும் மொட்டையுமாக வந்து படுத்தி எடுத்தார்.

புதிய படத்தில், உப்பு அண்ட் மிளகு” (அதாங்க… சால்ட்டு அண்டு பெப்பரு) கேரக்டர்களில் வந்து ரசிக்க வைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், இப்படி “ரெட்” மாதிரி மிரட்டுகிறாரே என்று தலை  தொங்கிப்போயிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.  தங்கள் ஆதங்கத்தை பேஸ்புக், டுவிட்டரில் கொட்டுகிறார்கள்.

ஆனால் படக்குழுவோ, “வேதாளம் படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில்தான் மொட்டைத் தலையோடு வருகிறார் அஜீத். மற்றபடி கெத்தான கெட் அப்பில்தான் படம் முழுக்க நடக்கிறார்” என்று ஆறுதல் சொல்கிறது.

மேலும், “ப்ளாஷ்பேக்கில் வரும் மொட்டை கேரக்டரின் பெயர் வேதாளம். ஆகவேதான் அதையே படத்தின் தலைப்பாக வைக்கலாம் என்று இயக்குநர் சிறுத்தை சிவா முடிவெடுத்தார்” என்றும் சொல்கிறார்கள்.

”அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களின் ப்ளஸ் பாயிண்ட்டே நல்ல ஓப்பனிங்தான். படம் நல்லா இருக்கா இல்லையா என்று ரசிகர்கள் யோசிப்பதற்குள்ளேயே  இரண்டு மூன்று வாரம் ஓடி, கல்லா கட்டிவிடும். ஆனால் இந்த “வேதாளம்” படத்தின் போஸ்டரே, தியேட்டர் பக்கம் ஆளைவிடாது போலிருக்கே!” என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்!

(சமூக ஆர்வலர்கள் போயி, சினிமா ஆர்வலர்கள் வந்துட்டாங்களா?)

 

 

 

 

More articles

Latest article