தலித் தலைவர்களின் நினைவு சின்னங்கள் மாநிலத்தின் பெருமை : மாயாவதி

Must read

க்னோ

த்திரப் பிரதேசத்தில் தலித் மக்கள் நினவுக்காக தம்மால் அமைக்கப்பட்ட பூங்காக்கள், சிலைகள் உள்ளிடவைகள் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பவை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி கடந்த 2008 முதல் 2010 வரை உத்திரப் பிரதேச முதல்வராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் அரசு செலவில் மாநிலம் எங்கும் பூங்காக்கள் அமைத்து அதில் தனது சிலையையும் தனது கட்சிச் சின்னமான யானை சிலையையும் அமைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

அதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. பொதுப் பணத்தில் மாயாவதி தன்னுடைய மற்றும் அவர் கட்சி சின்னமான யானையின் சிலைகள் அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றம் விளக்கம் கோரி மாயாவதிக்கும் உத்திரப் பிரதேச அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பியது.    அதற்கு அவர் அளித்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இந்த சிலைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க செலவான ரூ.2000 கோடியை பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவித்தது. இது பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு க்டும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, “உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல பூங்காக்களும் தலித் சமுதாயத்தை சேர்ந்த சன்னியாசிகள் மற்றும் குரு மார்கள் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கக் கூடியவை. இதனால் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த வழக்கில் ஊடகங்கள் நுழைந்து எங்கள் வாதங்களை திசை திருப்புகின்றன. நாங்கள் எங்கள் தரப்பு வாதங்களை வலுவுடன் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கை நிச்சயமுள்ள்து. அநேகமாக பாஜகவும் ஊடகங்களும் இதனால் ஏமாற்றம் அடையப் போகின்றன” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article