1
 
சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவன் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
2
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு  சிவில் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அஜித் குமார் என்ற மாணவர்  கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப்படித்து வந்துள்ளார்.  அவர் மார்ச் 7 ஆம் தேதி இரவு விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவருடைய மரணத்தின் பின்னணியில் ஜாதிய மோதல் இருந்ததாக அங்கு படித்து வரும் சக மானவர்கள் தெரிவித்துள்ளனர்.
3
அஜித்குமாரின் உடல் காஞ்சிபுரம் அரசு பொதுமருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து மாணவர்கள், மக்கள் மன்றத்தினர், விடுதலைச் சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட்  ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது…!
Viji’s Palanichamy (முகநூல் பதிவு)