சென்னை

நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நேற்றுவரை 99651 பேர் வந்துள்ளனர்.

இவர்களில் சர்வதேச விமானம் மூலம் 2731 பேர், உள்நாட்டு விமானம் மூலம் 9927 பேர், ரயில் மூலம் 10,222, சொந்த வாகனம் மூலம் 50,432 பேரும் பேருந்து மூலம் 26,339 பேரும் வந்துள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 1570 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் சர்வதேச விமான பயணிகளில் 92 பேருக்கும் உள்நாட்டு விமான பயணிகளில் 20 பேருக்கும் சாலை வழியே வந்தோரில் 1237 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

உள்நாட்டு விமானப் பயணிகள் விவரம் வருமாறு

மொத்தம் உள்ள 158 விமானங்களில் 9927 பேர் பயணம் செய்து அதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் கோவைக்கு 10 பேர், மதுரைக்கு 7 பேர்,திருச்சிக்கு 3 பேர் என கொரோனா நோயாளிகள் இருந்துள்ளனர்